பாவத்தின் பாரம்

தண்ணீருக்குள் அமிழ்ந்திருக்கிறவர்கள் தலைக்குமேல் எத்தனை மடங்கு தண்ணீரிருந்தாலும் அதனால் அவர்கள் ஒருவித பாரமும் உணருகிறதில்லை.

மூச்சடைந்து சாகிறதுமில்லை. அவர்களைப்போலவே பாவத்தில் அமிழ்ந்திருக்கிறவர்களும் தங்கள் பாரத்தை பாரமாக எண்ணுகிறதேயில்லை. ஆனால் மனிதன் தண்ணீரைவிட்டு வெளியே வந்து அந்தத்தண்ணீரில் கொஞ்சம் தூக்கப் பிரயாசப்படும்போதே அது எவ்வளவு கொஞ்சமாயிருந்தாலும் அதின் பளுவை உடனே கண்டுகொள்ளுகிறான். தங்கள் பாவ பாரத்தை உணர்ந்து மனந்திரும்பி என்னிடம் வருகிறவர்களுக்கு மெய்யான இளைப்பாறுதல். 'வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்: நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.' மத்.11:28

ஏனெனில் நான் அப்பேர்க்கொத்தவர்களைத் தேடவும் இரட்சிக்கவுமே வந்தேன். இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார். லூக்கா 19:10

ஆமென்.கர்த்தராகிய இயேசுவே வாரும்.
Price :  Leave a comment

Telugu